பக்கம்:தமிழஞ்சலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி ஒரு தடவை, அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்தக் காட்சியைக் காண முடிந்தது. தூய அன்போடு இருக்கும் அவரை, 'என்னை உங்களது அறிவாழத்திற்கு அழைத்துப் போங்கள் என்று வேண்டி நின்றேன். 'தம்பி! நீ ஓர் எஃகு தோளன் -புரட்சி மனோபாவம் கொண்டவன். ஆழத்திற்கு வந்து என்னைப் போல ஒடுங்கி விடாதே என்றார். நான் இனிப்புக்காக அழும் குழந்தைகளைப் போல -அழ ஆரம்பித்தேன். எனது அன்புப் பிடிவாதத்தை அவரால் மீற முடியவில்லை. இதயத்தின் தாள், திறந்தார். நான் அதனுள்ளே வேகமாக ஓடிவிட்டேன். அங்கே, நான் பார்த்த காட்சி -கற்றக் கல்வியனைத்தும் ஒரு முழுமை பெற்றிருந்தது. அவற்றை உணர ஆரம்பித்தேன். அதன் மென்மை, நிலவின் நிழலை விட: அழகாக இருந்தது! வெளியிலே அவர் சீறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார் - கடலின் வேகமான அலைகளைப் போல. ஆனால் கடலடியில், மோன உருவோடு, சலனமற்றிருந்தார்! அறிவின் மேற்பகுதி, எப்போதும் விடுதலைத் தலை வர்களுக்கு அலையாகவும் - தொண்டர்களுக்கு நிலவாக இருப்பதையும் - என்னால் அறுதியிட்டுக் கூற முடிந்தது. 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/110&oldid=863452" இலிருந்து மீள்விக்கப்பட்டது