பக்கம்:தமிழஞ்சலி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தன் கொடை உள்ளத்தைத் திறந்து கொண்டிருந்தது. அப்பொழுது பொற்றுகளை - மணிக் குலத்தைக், கடல் முத்தைப், போயெடுக்க அடக்கிய மூச்செவரின் மூச்சு? என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பாட்டைப் பாடிக் கொண்டே, இருவர் கீழே இறங்கி வந்தார்கள். முத்துக் குளிக்கும் அந்தத் தென்பாண்டி வீரர்கள் - சிப்பியை வரவேற்றனர். சென்று வருகிறேன் தோழா என்று கூறி, அவனின் உழைப்பால் பொலிவான, ஆண்டாண்டுக்காலம் தமிழ் மன்னன் தடந்தோளில் சிப்பி சென்று - சிரித்தபடியே குந்தியது. என்னுடைய எண்ணங்கள்: அறிஞர் அண்ணாவை - முத்து ஈனும் சிப்பியாக முத்துக் குளிப்போர் கையில் தவழும் - சிப்பியாக எண்ணின. எவனொருவன், தலைவனின் இதயத்தில் உருவானத் திட்டங்களைக் காலம் பார்த்து - உணர்ந்து - அதனை ஏற்றுச் செயல்படுத்த நெருங்குகிறானோ - அவனே, நல்முத்தை அடைகிறான். மிகவும் துன்பத்தை ஏற்று - நாட்டின் வளத்தை உயர்த்த - மூச்சடக்கி முத்துக் குளித்தாலொழிய - சிப்பி கிட்டாது. அதனைப்போல, ஆளும்கட்சிக்காரர்கள் அறிஞர் களைத் தேடிச் சென்றாலொழிய நாட்டின் எதிர்காலம் நன்கு அமையாது. நாட்டின் பெருந்தலைவர்கள், தங்களின் உண்மையான கீர்த்தியை, நெருங்கி வருபவர்களுக்கே வழங்குகின்றனர். i Ö3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/113&oldid=863455" இலிருந்து மீள்விக்கப்பட்டது