பக்கம்:தமிழஞ்சலி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி காரணத்தால் உருவான கடலில், எப்படி வந்திருக்க முடியும்? அந்த மலை, கடல் தோன்றுவதற்கு முன்பே உருவானதா? அல்லது - கணக்கிட முடியாத அளவிற்கு வெப்பத்தைக் குறைத்துக் கொண்ட குளிர் காலத்தால் - நீர் இறுகிப் போனதால், ஆனதா? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பனிமலையின் தோற்றம், அந்த அமைதியான கடலில் - சூட்சமத்தால் தொங்கும் மணியைப் போல, ஆடிக் கொண்டிருக்கிறது. அந்த மலையின் அருகே, அக்டோபஸ்", போன்ற, கடல் மிருகங்களும் திமிங்கலம் - சுறா போன்ற கடல் வாழ் பிராணிகளும், சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன. கடல் குதிரை போன்ற மிருகங்கள், அம்மலையின் மீது ஏறுவதும் - இறங்குவதுமாக இருக்கின்றன. அப்போது, நீர்மட்டத்தில் போய்க்கொண்டிருந்த கடல் கொள்ளைக்காரனுடைய கப்பல், அந்த மலை மீது மோதிச், சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது. நடுக்கடலில் இது போன்ற ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்திருந்தாலும் - ஒன்றும் நடக்காதது போலவே, கடல் அமைதியோடும் - அடக்கத்தோடும் ஆடிக் கொண்டி ருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் பனிமலையைப் போன்ற வர். அவர், ஆழமான கடலில், ஒரு கண்டாமணியைப் போல இருந்தார். 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/117&oldid=863459" இலிருந்து மீள்விக்கப்பட்டது