பக்கம்:தமிழஞ்சலி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி நீ! நீ! தன்னலத்தை மறுத்த, தாய்மை நீ! தழைப்பதற்கே நிலைத்து நின்ற, தத்துவச் சுரங்கம் உற்றிருந்த உணர்வுக்கு உருவம் நீ! உற்றவர்க்கு சுற்றமாய், நின்றாய் நீ! கற்றறிந்த கலைஞானம், முழுமையும் நீ! பெற்றிருந்த தாய், அவளின் அன்பும் நீ! பின்னியெனைப் பிணைக்கின்ற, பிணைப்பும் நீ! வற்றாத அறிவுக்கு மூலமாகத் திகழ்பவர் நீ! வண்டமிழாள் ஈன்றளித்த தலைமகன் நீ! உதயத்தின் உச்சியே! உலகத்தின் உண்மையே நீ! பனிமலரே! பன்னுரல் பயனே! பாசத்தின் குருதியே திருமணியே! தீந்தமிழே. தித்திக்கும் தேன்பாகே நீ! தீங்கரும்பின் இன்சுவையே! திகழும் சோதியே நீ! அருளே! அருட்கருவே! அன்பின் இலக்கணமே நீஒருவனாய் உலகுக்கு வந்துதித்த ஒழுக்கமே நீ! ஒருருவில் மூவுருவம் ஆனாய் நீ! கருவறுத்து இந்தியினைக் காய்த்தோன் நீ! கனித்தமிழின், கனிச்சாற்றால் சுவை தந்தோன் நீ! மருவற்ற சொல்லாட்சி செய்பவனே, நீதான்! மான் அமைதி நெஞ்சம் கொண்ட, மாமேதை நீ! | i4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/124&oldid=863467" இலிருந்து மீள்விக்கப்பட்டது