பக்கம்:தமிழஞ்சலி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி மேடு பள்ளங்களைக் கொண்ட சமுதாயத்தை, நீ சமத்துவச் சமன்படுத்துவதை நான் உணர்கிறேன். இல்லாவிட்டால் ‘கருங்காலி மரத்தை யொத்த சில மக்கள் மீது, சந்தன மரத்தின் நறுமணத்தைத் தவழ ayfiG)g)jmuamP சந்தன மரத்திலே நீ தவழும்போது, அந்த மரத்திலே தேன்கூடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. தேன், இனிப்பைத்தான் தரும். சுவைக்கப்படும் பொழுது நீ அந்தத் தேன்கூட்டிலே தவழ்ந்ததால், அது மணத்தையும் தருகிறது. என்னே உன் சேவை! காட்டிலே, நீ உலவப் புறப்பட்டபோது, புன்னை, தேக்கு, ஒதியம், வேம்பு, பூவரசு, மூங்கில், தூங்குமூஞ்சி, கொங்கு போன்ற பல மரங்களையும் பார்த்திருப்பாய். இருண்ட கானகத்திலே மட்டுமா அவை உள்ளன. இருண்ட என் சமுதாயத்திலும் அவை மலிந்து கிடப்பதைக் கண்டிக்கிறாய்! அதனால்தான் அவற்றைத் திருத்த, சந்தன மரம்போன்ற உயர்ந்த பண்புகளைப் பரப்பி, நீ சமுதாயத்தை மணம் கமழச் செய்கிறாய் என்று எண்ணுகிறேன். இந்த உன் செயலும் ஒரு சமுதாய சீர்திருத்தந்தானே? இன்றேல், துங்குமூஞ்சிகளைத் தட்டி எழுப்பி, வேம்பு மூலம் சித்த வைத்தியம் செய்திருப்பாயா? 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/140&oldid=863485" இலிருந்து மீள்விக்கப்பட்டது