பக்கம்:தமிழஞ்சலி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி முத்து முத்தான கருத்துக்களை உடைய கடலிலே போய் தவழ்கிறாயே ஏன்? கடலலையின் உச்சிதோறும் சென்று சதிராடுகிறாய். அந்த இலக்கியக்கடலிலே ஆமையாகவா அடங்கிக் கிடக்கிறாய்? அந்த இலக்கியக் கடலலையிலே தெப்பம்போல மிதந்து மிதந்து, மூழ்கி மூழ்கி, பல முத்துக்களையும், பவழங்களையும் சேகரித்து - இலக்கிய அறிவு பெறுகிறாயே. இலக்கியம் என்றால் விளையாட்டா என்ன? இதை அறிவாய் நீ - நன்கு அறிவாய். இலக்கிய கடலுக்குள் புகுந்த ஒரு புலவன், சாகும் காலம் வரை மீண்டும் திருப்தியோடு திரும்ப முடியாதே. திருக்குறள் ஆராய்ச்சியிலே சென்றவன் இன்றுவரை திரும்பியதில்லை! சிலப்பதிகாரத்துள் புகுந்தவன், காலம் போதவில் லையே என்று - தடுக்கி வீழ்ந்து விட்டான்: கலிங்கத்துப் பரணிக்குள் கரை காணச் சென்றவன் - போர்க்கள் ஒசையிலேயே, மூச்சுத் திணறி விட்டான்! அகம், புறங்களை அலசுகிறேன் என்று சென்றவர்கள் - அந்த எல்லையை விட்டு இதுவரை வந்ததில்லை. தமிழ் இலக்கியத்தின் பொருள். ஆழ்கடலையும் மிஞ்சியது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/147&oldid=863492" இலிருந்து மீள்விக்கப்பட்டது