பக்கம்:தமிழஞ்சலி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி சுற்றிச் சுழற்றச் செய்து அறப்போர் வீரர்களாக ஆக்கிவிட்டாய். சாதாரண தாழைமடல்கள் - கத்திபோல் கூர்மை யானதாக இருப்பினும், அவற்றை வீரர்களாக நடமாடச் செய்து விட்ட பெருமை, உன்னையல்லால் வேறு எவருக்குண்டு? அத்தகைய வீரர்களைப் போல நடித்த நாணற் பூக்களை - பூ உருவிலே புகுந்துவிட்ட பயனற்றவைகள் என்று, அவற்றைக் காட்சிப் பொருளாக்கி விட்டாயே. தென்றலை அனுபவிக்கமுடியாத அவை, புயலிலே சிக்கிச் சிக்கிச் சுழன்று வருகின்ற நிலையை அவை தேடிக் கொண்டன. நீ போகும் இடமெல்லாம் உனக்கு வரவேற்பு வாழ்த்து! விழாக்கோலம்! நாணற்பூக்கள். பெயருக்குப் பூவாக இருக்கின்றன! பிறவி எடுத்துவிட்டமைக்காக அலை பாய்ந்து, வளைந்து, நெளிந்து; வரண்டு சோர்ந்து விழுகின்றன: அவற்றைக்கூட, நீ மன்னித்து விடுகிறாய்; சில்லென்று வீசி! ஆனால், அவைதான் தலை குனிந்து விடுகின்றன: வெட்கத்தால்! உன்னைக் கண்டால் மக்களுக்குப் பிடிக்கும்; மகிழ்கிறார்கள். ஆனால், சுரம் கண்டவன் மட்டும் உன்னைக் கண்டு ஒடி ஒளிகிறான். } 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/149&oldid=863494" இலிருந்து மீள்விக்கப்பட்டது