பக்கம்:தமிழஞ்சலி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பொது மக்களும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியம். இதைத் தெளிவுற உணர்ந்ததால், தென்றலே நீ பொது மக்கள் உள்ளங்களிலே எல்லாம் புகுந்து, கருத்துக் குளுமையைத் தவழவிடுகிறாய்! இளமுல்லை போன்ற வீராங்கணைகள் உள்ளத்திலும், நீ புகுந்து, உணர்ச்சிப் பிழம்பைத் தட்டி எழுப்புகிறாய். வீரத்தை அவர்களிடையே விளையாட விடுகிறாய்! வாழ்க் நீ வாழ்க மக்கள் சிந்தையணு ஒவ்வொன்றும் மொழி உணர்வு கொண்டு, பொதிகையிலே உன்னுடன் பிறந்த தமிழனங்கைப் போற்றிப் பாதுகாக்க வந்த செல்வமே! தென்றலே! வாழ்க நீ பல்லாண்டு! தமிழகத்தின் பேரறிவுப் பெட்டகமே! பெரும் நிதியே! உன் புகழ் தமிழ் உணர்வு பெற்றவர்களின் வீடுதோறும் திருவிளக்காய் திகழ்கின்றது. எந்த நாட்டிலும் தோன்ற முடியாத தென்னாட்டுத் தென்றலே! அறிவுலகசோதியே! காஞ்சி நகர் வாழ் தென்னலே! தென்றலையொத்த உமது அரிய சேவையை நாங்கள் உணர்ந்தோம் நாடும் கண்டு களி பேருவகை கொள்கிறது. இயற்கையின் செல்வமே தென்றலே உன்னைப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்! நீ பிறந்த நாட்டிலே உனக்காக, எமது மூச்சுள்ள வரை. நாங்கள் விழாவெடுக் கிறோம்! 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/154&oldid=863500" இலிருந்து மீள்விக்கப்பட்டது