பக்கம்:தமிழஞ்சலி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நான் படைத்த பூக்களின் வண்ணங்களை, என் எண்ணம் ஏன் கவனம் வைக்கவில்லை? சுவையாகப் படைத்த கனிகளின் சுவையை, நான் அறிந்தவனல்ல! இவ்வளவையும் நீ செய்த பிறகும் நான் கடைத்தேற முடியவில்லை! மடையுடைத்துக் கிளம்புகின்ற உன்னை, மனக் கண்ணில் கண்ட பிறகுதான், என் அகக் கண் திறக்க ஆரம்பிக்கின்றது! ஏ, சுடரொளி: மேகம் மூடிய வானத்தின் கீர்த்தியே! உனது ஆதிக்கத்தால் கேட்பாரற்றுக் கிடக்கின்ற விதைகள் முளைக்கின்றன. வெளுத்துப்போன இலைகள் பச்சையாகின்றன! நெளியும் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் ஆகின்றன! பறவைக் குஞ்சுகளின் இறக்கைகள் முதிர ஆரம் பிக்கின்றன. அருவியின் அலையோசை, அருகில் இருக்கும் வெட்டுக் கிளியின் காதிலே பாய்கின்றது. பச்சைப்புல் மீதிருக்கும் ஒவ்வொரு பனித்துளியும், உன் எழிலை எழுதி எழுதிப் பழகுகின்றன. அடிவானத்தில், நீ தொட்டில் இட்டுக் கொண்டி ருக்கின்றாய்! வானத்தின் சிம்மாசனத்தில், நீ மதியத்தில் அமரு கின்றாய்! 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/159&oldid=863505" இலிருந்து மீள்விக்கப்பட்டது