பக்கம்:தமிழஞ்சலி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணாவும் காலத்தால் எப்படிக் கவனிக்கப்படுகிறார் என்பதையும் சிந்திக்க வேண்டும். செத்துப்போகும் - நினைவாற்றல், மனித சமுதாயத் திற்கு இருக்கும் வரையில் - அவர் என்றும் வாழ்கிறார். "கரைந்து வருகின்ற நிலவுக்கொரு கவிஞன்” என்று ஓர் அறிஞன் கூறுகிறான். கறையற்ற அறிஞனுக்குக் காலம் என்று, நான் பெயர் சூட்டுகிறேன். யாரையும் உற்பத்தி செய்து பாரின்மீது உலவ விட்டு நடத்து உன் நாடகத்தை என்று - காலம் கூறுகிறது. அதைக் கடவுள் பக்தன் அனாதியென்கிறான். 'இதற்காகவே பிறந்தேன்' என்று அறுதியிட்டு உறுதியாக வாழ்ந்து வந்த அறிஞனை, காலகாலத்தின் சுழி - காலத்தின் வேகம் என்று, ஏன் கூறக்கூடாது? . பிறக்கப்போகும் கருவுக்குள், அறிஞர் அண்ணாவினு டைய நினைவு: கொப்பூழ் கொடி வழியாக, உணவோடு உணவாகச் - செல்கிறதென்றால், இது பத்து மாதத்தில் நடைபெறுகின்ற தெய்வீக விசித்திரம் என்பதன்றி, வேறென்னவென்று கூறுவது? விதியென்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றென்று வேதாந்தி கூறுகிறான். அவ்வப்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புடையதை - மதி என்று சித்தாந்தி கூறுகிறான். 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/16&oldid=863506" இலிருந்து மீள்விக்கப்பட்டது