பக்கம்:தமிழஞ்சலி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி நட்சத்திரத்தை அன்றி, வேறு எதையும் காணவில்லை என்பதும் உனக்குத் தெரியும்! அப்போதெல்லாம், நான் உனது கிரணங்களால் ஒளி கண்டு, நல்ல இடத்தை நாடியே வந்திருக்கிறேன். எனது ஆசையும், காதலும் உனது பலிபீடத்தின் மீது துவங்கியதாகும்! என் குழந்தைகளின் எதிர்காலத்தையும் - எனது இறுதி காலத்தையும் - நான் அந்த பலி பீடத்தின் மீதே வைத்துத் துவக்குகின்றேன். உனது கதிர் வட்டத்தால் , என்னை எந்த உருவமாக்கினாலும் - அந்த உருவத்தை அடைகின்ற பக்குவப்பட்ட களிமண் நான்! எனது பண்பாட்டையும் நாகரிகத்தையும், ஆயிரம் ஆண்டுகளாகத் தன்மை மாறாதிருக்கும் உனது பாதத்திலே வைக்கின்றேன். எனது எண்ணங்கள் அத்தனையும், உன்னிடத்திலே தான் துவங்குகின்றன. கொஞ்சமும் தாமதமின்றி, அவை உன்னைப் பின் தொடர்கின்றன! எனது பகற்கனவுகளும் இராக் கனவுகளும், நீ கொளுத்திய ஆயிரம் விளக்குகளால் ஆனவை. மயத்தில் நீ தலைநிமிர்ந்து நிற்கும்போது, என்னுடைய கரம் உன்னை நோக்கி வளர்கின்றது: 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/165&oldid=863512" இலிருந்து மீள்விக்கப்பட்டது