பக்கம்:தமிழஞ்சலி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி நீ தூய்மையானால் ஞானத்தின் ஊற்றா? நீ அன்பானால் அடிமைப்படுத்தும் முயற்சியா? நீ அணைப்பானால், நான் உன்னுள் அடங்குபவனா? வித்தைகள் செய்கின்ற நீ எங்கிருந்து வந்தாய்? இருந்தாய்? திராட்சையின் இனிமையில் இருந்தா? பாட்டின் அடிப்படையில் இருந்தா? என் தாயின் பாசத்தில் உலகத்தை வாழவைக்கும் உதயசூரியனே! உன்னை இன்னொன்று கேட்கிறேன். ஓசை விம்ம காற்றுக்கு ஒரு பாட்டு உண்டு. அப்பாட்டுக்கும் ஓர் கனவு உண்டு. அக்கனவு எழும் இடத்தைத்தான் கவிஞனுக்கு ஏற்ற இடம் என்று சொல்வார்கள். என் உறவே, ரத்தத்தைச் சூடேற்றும் உணர்ச்சியே, அந்த இடத்தில் இருந்தா வந்தாய்? உன்னுடைய ரதம் அங்கேயா இருக்கிறது? நடை தளர்ந்த நாள் செத்துவிட்டது! புதிய இரவு பூத்துவிட்டது! காட்டின் சூழ்நிலை கங்குலின் தோள்மீது தட்டியது! அப்போது இனம் புரியா பயம் ஒன்று எங்களுக்கு ஏற்பட்டது. இது இரவுக்குத் தரும் இனிதான விளக்கம். என் தாய் நாட்டுப் பண்பு, அனாதை ஆசிரமத்தில் வாழ்கின்ற சிசுவல்ல, என்னுடைய லட்சியம் எல்லோரும் திருடி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொருளும் அல்ல. 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/168&oldid=863515" இலிருந்து மீள்விக்கப்பட்டது