பக்கம்:தமிழஞ்சலி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மதிக்கும் - விதிக்கும் பொதுவாக இருக்கின்ற காலம்: அண்ணாவை - இரு சாராருக்கும் அளிக்கிறது. சிற்பியினிடம் கிடைத்த கல், உளியின் போராட்டத்தில் துவண்டும் இளைத்தும் பிறகு உருவம் பெறுகிறது. விதியின் இடது கைக்கும், மதியின் வலது கைக்கும் கிடைக்கப்பெற்ற அண்ணா சிற்பியின் கல்பெறும் உருவம் போல - வரலாற்றுக்குரிய மையப் புள்ளியாக மாறுகிறார். விதி விமர்சனம் செய்கிறது - மதியும் விளக்கம் கூறுகிறது! முடிவில், அண்ணா அண்ணாவாகவே இருக்கிறார். அவர் ஒரு காலமாக இருப்பதால்தான், குளிரில் பூத்துக் கோடையில் கருகாத, வாசனைப் பூண்டாக: மலராமல் இருக்கிறார். சரித்திரம் சடங்கு செய்து பூஜிக்கும் தெய்வீகமாக அண்ணா நிற்கிறார். தெய்வீகம் என்ற சொல்லை, நான் வைதீக நினைவோடு கையாளவில்லை. உலக நெறியின் மூத்த முதல் தந்தையான வள்ளுவப் பெருமான் குறிப்பிட்ட, "மாறா இயற்கை" என்ற பொருளிலே தான், கையாள்கிறேன். அறிஞர் அண்ணாவின் தலைமையால், நாடும் மொழியும் உறக்கம் தெளிந்தன என்பதைக் கட்சிக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/17&oldid=863517" இலிருந்து மீள்விக்கப்பட்டது