பக்கம்:தமிழஞ்சலி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி இந்த இசையின் கூர்மையால், எனதுள்ளம் பொத்தலானது. அதிலே அந்தக் கருத்துக்கள் குடித்தனம் செய்தன. மலைகளில் சந்தனத்தை - மேகத்தில் நீரை - கடலில் முத்தை - வானில் நிலவை - தேனில் சுவையை - வயலில் ஆட்டத்தை - புயலில் பேயாட்டத்தை - நெருப்பில் சூட்டை - நிலவில் குளிர்ச்சியை உண்டாக்கி, மகிழ்ந்து, ஒய்வெடுக்கும் தாயே. உனது பெயரில் எனது ஜீவன் தாலாட்டுப் பாடுகிறது. நீதி மன்றத்தில் நின்று அந்தியைக் கண்டிக்கின்றவளே. பள்ளியிலே இருந்து புதுப்பாடத்தைச் சொல்லிக் கொடுப்பவளே, விருந்திலே அறுசுவை படைப்பவளே! உன்னை நான் ஒன்று கேட்பேன்! எனது ೭5@ಹಗಿನು உதிரும் ஒவ்வொரு வார்த்தையும், நீ - தந்த நம்பிக்கையாகும்! எனது பூர்வகாலத்தியச் சொத்து எல்லாம். நீ - எழுதிவைத்தவைதான். அதையே, கேள்வி ரூபத்தில் உனக்கு அனுப்பி வைக்கிறேன். i83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/193&oldid=863543" இலிருந்து மீள்விக்கப்பட்டது