பக்கம்:தமிழஞ்சலி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி ஒரு கவிஞன், எண்ண வெளிச்சத்தில் மறைந்திருந்து, தனியாகத் தன் ஆத்மாவோடு பாடிக்கொண்டு, எழுத்துக் களைக் கவிதையாக்கத் துடித்துக் கொண்டிருப்பது போல் - அண்ணாவும் தினந்தோறும் நினைத்தார். அதோ தொடுவான் முகத்தில், புன்னகைக் கொடிகள் படர்ந்து மறைகின்றன. நான் கவிஞனாக இருந்தால், அதனை மின்னலுக்கு உவமையாகக் கொடுப்பேன். நான் எழுத்தாளன் - நொந்துபோன நெஞ்சிலே விழுந்த கீறலாகவே கருதுகிறேன். அந்த சின்ன மின்னல் ஒளியில், பேரொளியைக் கண்டபோது, மண் புழுக்கள் கீரைப் பாத்திக்கு நடுவிலே, எட்டிப் பார்த்ததை, நான் கண்டேன். அண்ணாவின் சிறு சிறு எண்ணங்கள், என் போன்ற மண் புழுக்களுக்கு, அப்படித் தானே தெரியும். நான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்த ஒரு சீமாட்டியாக இருந்தால், எனது மாளிகையின் மேற்பரப்பில், அன்புக் காதலனிட்ட உயிர் முத்தங்களை, என் உதட்டிலே எப்படி விளையாடுகின்றன என்பதைத் தன்னந் தனியே நான், சிந்திப்பேன் அல்லவா? ஆனால், நான் தொழி லாளிக்கு வாழ்க்கைப்பட்டவள்! எனக்கு அவரிட்ட முத் தம் வட்டியிலே மூழ்கிப்போய் விட்ட குத்து விளக்காகும்! அந்த ஒளியை நினைத்து, நானும் பெருமூச்சு விடுகிறேன். 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/200&oldid=863551" இலிருந்து மீள்விக்கப்பட்டது