பக்கம்:தமிழஞ்சலி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி வளைவே, அகிலாண்ட விரிவே, ஊழிக்கு உறைபோட்ட ஊழியே. வெளியே உயிரணுக்கள் இருக்கின்ற இடமெல்லாம் போய் இதனைச் சொல்லாயோ! துயருக்குத் தொடுகின்ற புகழ் மாலை. மாலையிலுள்ள பூக்களை வண்டினங்கள் வாய்வைத்து உறிஞ்சி எச்சில் படுத்தவில்லை. புத்தம் புதிய பூக்கள் - பொழுதுக்கே பூத்த பூக்கள் - சத்துடைய ஒருவனுக்கு சாற்ற வந்த பூக்கள் நிலாச் சொறிந்த வெள்ளிப்பூ! ஒடும் மின்னற் கொடியில் - உதிர்ந்த பிழம்பொளிப்பூ! நல்ல பூ! இப்பூக்கள், அண்ணா என்னும் என் இரு கண்களுக்கு இட்டப் பூக்கள். வீனுக்குத் தலை வைத்து - வெறுப்புக்கு வழி வைத்து, மானிடராய்த் திரிபவர்கள் ஒதிய மரங்கள்! ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை - ஒர்ந்தோர்ந்து - ஆங்கார அடுப்பவித்து - பாங்கான பண்பெனும் விளக்கேற்றி - தீங்குக்கு உளம் நடுங்கும் தித்திக்கும் மனமுடையோர் வரிசை தன்னில் - ஓவியமாய் - காவியமாய் - ஜீவியமாய் இருப்பவரே - அறிஞர் குல அரசறே! கண்ணுள்ளே விளங்குகின்ற மணியே - இன்பக் கனியே - நாவரசே - செங்கரும்பே - ஞானப் பண் னுள்ளே விளைந்த அருட்பயனே! 2O6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/216&oldid=863569" இலிருந்து மீள்விக்கப்பட்டது