பக்கம்:தமிழஞ்சலி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி நெஞ்சிலே கை வைத்துச் சிந்தித்துப் பார்! வருடம் முழுவதும் வியர்வையைப் பிழிந்து விட்டு, களை பிடுங்கி, கண் விழித்துக் காத்துக், கழனியெல்லாம் பச்சை நிறங் கொண்டு, பரிணமிப்ப தொன்றாலே, அதை மாயை என்று சொல்வது அறிவாமோ! அதை மடமையென நான் கூறல் வேண்டுமோ! என்றது பச்சைப் புல்வெளி: ஆண்ட தமிழகத்திலே அளப்பரிய இலக்கியங்கள்! பூண்ட தமிழ்க் கோலம் பூரிப்பாம்! காண்டல் கண்ணுக்கு இனிதென்றார். அதன் தொனியைக் கேட்டால் காதுக்குத் தேன் என்றார். இஃது உனதன்னை இருந்து ஆண்ட நிலம். அஃது இஞ்ஞான்று அவள் கையில் இல்லையடா! வளத்தோடும் - வனப்போடும் வந்தோர் வாழ்கின்ற ஒனர். செங்களத்தில் செந்நீர் மடை திறந்த இந்நாட்டு மறவரெலாம்: அடிமைத் தளை பூட்டி: ஆங்காங்கு கிடக்கின்றார். இந்த வளமிருந்தும் ஈடற்றத் தமிழ் மகனே நீ நொந்து நலிகின்றாய்! ஏனப்பா, நிலை கெட்டாய்? என்று தெருதோறும் முழக்கம் செய்கின்ற அண்ணன் மனத்திரையில்: கருகாதிருப்பது கன்னித் தமிழ் வளமன்றோ! 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/50&oldid=863606" இலிருந்து மீள்விக்கப்பட்டது