பக்கம்:தமிழஞ்சலி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அதனால், அவர் பசுமையான சீர்திருத்தவாதியாக விளங்குகிறார்! மாதவிப் பூ வெண்மை நிறமானதன்றோ! அந்த தமிழ் மகனின் உள்ளமும் மாதவிப் பூவைப்போன்றதே! என்பதனை மக்களறிந்து கொண்டனர்! மனம் திறந்த மக்கள், மடைத்திறந்த வெள்ளம் போல அவரைப் பின்பற்றி ஓடி வந்தனர். அப்பூவின் பத்து கேசரங்களும் பொன்னிறத் தாதை உகுத்து நிற்குமாம்! அறிஞருள் அறிஞராக விளங்கும் அண்ணாவும்: பொன்னிறத்தாதையொத்த தனது அறிவினை நமக்கு வழங்கினர்! ==țiouogorfeðr susirgust @põrré) grešar (Chromo some Number) க்ரோமோசம் நம்பர் இன்றுவரை கண்டு கூறப்படவில்லை. அதுபோலவே, அவரின் இதயபூர்வமான - உண்மையான - மக்கட்தொண்டு - இன்னும் சிலரால் உணர்ந்து உலகுக்கு உரைக்கப்படவில்லை! காலம் அந்தச் சிலரது விழிகளைக் கட்டளையிட்டுத் திறந்தே தீரும் என்பது உறுதி! தமிழகத்திலே தோன்றிய மாதவிக் கொடி: ஆங்கிலமறிந்த உலக ஆய்வாளர்களால் ஆராயப்படுகிறது! - போற்றப்படுகிறது! அதுபோலவே, உலகம் ஆராய்ந்து போற்றும் நிலையை அவர் ஓர் நாள் பெறுவார்! 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/55&oldid=863611" இலிருந்து மீள்விக்கப்பட்டது