பக்கம்:தமிழஞ்சலி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அவர் வழங்கிய அறிவாழமிக்கக் கருத்து மணம்: வாயுதிர்த்த வளமான பேச்சுக்கலை: இவையனைத்தும் கொடுக்கும் அறிவொளியில் தமிழ் மக்கள் குடியிருக்கின்றனர். அந்த எண்ணச் சுடரனைத்தும் அறிவின் தொகுப்புகள்: காலத்தை மீறி நிற்கும் சாகாவரம் பெற்றவை! ஞாலத்தைத் தன் பக்கம் இழுக்கும் வளமான தத்துவங்கள்! பச்சை என்றாலே வளத்தைச் சுட்டும் நிறமன்றோ! சமுதாயம் சரிநிகர் சமமாக ஒழுகும் சரியானப் பாதைகளன்றோ அவை! முற்றும் நீ அறிவாயே! பின் ஏன் முனையொடிந்தக் கருத்தாலே, பச்சையை மாயை என்றாய்! வெற்றுக்கு நீயுரைத்தாய்; விளக்கம் நான் தந்துளேன். விளங்கி நீ செல்வாய் என்று, முற்றிற்று, கூறிற்று, ட ச்சை. 女女★次 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/57&oldid=863613" இலிருந்து மீள்விக்கப்பட்டது