பக்கம்:தமிழஞ்சலி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி கூறுகிறேன் கேள் என்றது வேங்கை பூ. என்னடா ஒவ்வொரு பூவும் நமது அறிவைச் சோதிக்கின்றனவே என்று வியந்தான் மாயையை நம்பிய மனிதன். உனது வரலாறு என்ன? அதை உரை, கேட்கிறேன் என்றான் அவன். வேங்கைப் பூ தனது மேதா விலாசத்தைப் பூரிப்போடு பு:கன்றது. தம்பி, தமிழ் இலக்கியங்களை நீ படித்திருக்கிறாயா? அவற்றை நீ நாடியிருந்தால், நான் உனக்கு அறி முகப்படுத்தப்பட்டிருப்பேனே! கன்னித் தமிழ் இலக்கியப் புலவர்கள், வேங்கை மரத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியிருக்கின்றனர். நான் எங்கே விளைகிறேன் தெரியுமா? அது ஒரு பெரிய வரலாற்றுக்குரிய இடமாகும். மலைக் குன்றுகளின் சரிவுகளிலேயுள்ள கற்களைக் காட்டாறுகள் கூழாங் கற்களாய்க் கரைத்து வருவதைக் கண்டிருப்பாயே. அந்த ஆறுகள்அடவிகளின் இடுக்கிலே வளைந்து வளைந்து பாம்புகளைப் போல சீறிப் பாய்ந்து வருவன: பலவகை மர இனங்களை, அவ் ஆறுகள் சந்திக்கும்: அவற்றின் மணங்களோடு அவை ஒடி வரும். 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/63&oldid=863620" இலிருந்து மீள்விக்கப்பட்டது