பக்கம்:தமிழஞ்சலி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி வது பாடல் கூறுகிறது. இத்துணைச் சிறப்பு பெற்ற வேங்கை மரம், தமிழகத்தில் மட்டுமே தனிச் சிறப்புடன் வளர்கிறது. மாயையை நம்பும் மனிதா இஃதுதான் எனது வரலாறு - போதுமா விளக்கம்? வேங்கைப் பூவே, உனது வரலாறு வேடிக்கை! வேடிக்கை என்றான் - மாயை மனிதன்! நீ கூறியதைக் கேட்டேன். ஆனால் அஃது ஒரு கதையாகவே இருக்கிறது! ஆனால், நேரில் உன்னைப் பார்க்க முடியவில்லையேஎன்றான்! கானகமும் மலையையும் நோக்கி ஓடிவந்து என்னை நீ காண முடியாதுதான்! அந்தோ பரிதாபம்! பரிதாபம்! ஆனால் உன் அருகிலேயே ஒர் அறிஞர் இருந்தார்: நீ இருக்கும் இடத்திலேயே அவரும் உன்னுடன் நீக்கமற வாழ்ந்தார்! அவரிடத்தே நான் கலந்திருக்கிறேன்! அதையும் கூறட்டுமா உனக்கு: அப்படியா யார் அவர் எங்கே கூறு என்று கேட்டான் அவன் பூ கூற முற்பட்டு பேச ஆரம்பித்தது! வேங்கை மரத்தின் வீரக் கதையைக் கேட்டாயல்லவா? அந்த மரம், வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றிய மரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/74&oldid=863642" இலிருந்து மீள்விக்கப்பட்டது