பக்கம்:தமிழஞ்சலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் விழுங்கிக் கபாடபுரத்தைக் கயளிகரம் செய்தது! கவின்புகாரின் உடலை விழுங்கி, தென் மதுரை உயிரை மாய்த்து, அதனதன் வரலாற்றுப் புகழுக்குக் கல்லறை கட்டியது; இந்த உலகத்தில் இன்று வரை, எண்ணற்ற எரிமலைகள், கடற்கோள்கள், பூகம்பங்கள் தோன்றின; மேதினியின் மேனியை ஆங்காங்கே திட்டுத் திட்டாக அழித்தன! ஆனால், இந்த அவனிமட்டும் ஏன் அழியவில்லை? இந்த வினாவிற்கு எந்த ஞானியாலும், விஞ்ஞானியாலும், பகுத்தறிவாளனாலும், அறிவுலக மேதையாலும் இன்று வரை நேரிடையான பதிலைக் கூற முடியவில்லை! மனித வாழ்வியல் இலக்கியத்திற்கு, இலக்கண வரம்பமைத்த திருவள்ளுவப் பெருமான் ஒருவர்தான், சரியான, நேரிடையான விடையை அளித்துள்ளார். 'நெருநல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் உலகு" என்றார். நேற்றிருந்தார், இன்று இல்லை என்றாலும், நிலையாமை மிகுதியினை உடைய அவரது ஞானத்தை, அதனால் உருவாகும் புகழை, பெருமையை, இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறது எனறாா. நாளை வரும் எதிர்காலத்திற்கு அறிவித்திட, அவற்றை நிலையாக நிறுத்திகொண்டு இந்த ஞாலம் இயங்குகின்றதாம், அதனால் உலகமும் பெருமையடைகிறதாம் அழிந்துவிட்டால் இந்த பெருமை, புகழ், உலகுக்கு ஏற்படாதல்லவா? அதனால்தான் இந்த உலகம் அறிவுக்கொடைகளாக ஒவ்வொரு துறையிலும் ஞானிகளை அவதரிக்கச் செய்கின்றது என்பதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் ஒர் எடுத்துக்காட்டாக - அவரது ஞானத்திற்கு, பண்புக்கு, தொண்டுக்கு, புகழுக்கு, நிலையாமை மிகுதியினை வென்று, அழியாத ஞான சக்தியாக நிற்கின்றார். "சாம்போது அண்ணா புகழ்பாடிச் சாகவேண்டும் - என் சாம்பலும் அவர் புகழ் மணந்து வேக வேண்டும்" என்பதே எனது எண்ணமாகும். அதன் சிறு அனுவே இந்த எனது தமிழ் அஞ்சலி'யாகும். - என்.வி.கலைமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/9&oldid=863676" இலிருந்து மீள்விக்கப்பட்டது