பக்கம்:தமிழஞ்சலி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி பேரிரைச்சலோடு கீழே விழும் நீர் வீழ்ச்சி! கீச்சான் பூச்சிகளின் தொடரொலிகள்! காட்டு விலங்குகளின் உறுமல்! ஆனாலும், என் கண்கள் மட்டும் அறிஞன் ஒருவனின் கபாலத்தைப்போல் வளைந்திருக்கும், வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன! வான் மண்டலத்தில் நான் பார்த்த பறவை - என் கண்களுக்கு இன்னும் தெரியவில்லை. நான் இருக்கும் பகுதி, மலைப்பகுதியாக இருப்பினும் - பக்கத்திலே மக்கள் வாழும் பகுதியும் இருக்க வேண்டும். இரவு உணவை முடித்துவிட்ட கிராம மக்கள், பறையொலியால் ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. அவர்களும் விழித்திருக்கிறார்கள் - நானும் விழித் திருக்கிறேன். அவர்களது எண்ணங்கள் கலையுலகத்தில் சஞ்சரிக் கின்றன! என்னுடைய எண்ணங்கள் வான மண்டலத்தையே வியப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. அந்த மக்கள், பகலெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்தவர்கள். அந்திக்குப் பின்னால் களைப்பைப் போக்கிக் கொண்டனர் - இரவில் கலையைக் காண்கிறார்கள்! 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/93&oldid=863683" இலிருந்து மீள்விக்கப்பட்டது