பக்கம்:தமிழன் இதயம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் கேட்டவர்கள் பாடினவர் எல்லாம் சேர்ந்து கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி நல்ல ஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும் ; பாட்டினோ டிலக்கியமும் படியப் பாடிப் பருந்தோடு நிழல் செல்லும் பான்மை காப்போம் ; கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்திடாமல் குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும். பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும், பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும், விலை கூட்டிக் கலையறிவை வாங்கி யேனும் விதம்வி தமாய்த் தமிழ்மொழியில் விரிக்க வேண்டும் அலை நீட்டும் கடல்கடந்த அறிவானாலும் அத்தனையும் தமிழ்வழியில் ஆக்கவேண்டும் நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக்கென்றே நிச்சயமாய் உழைக்கொரு நிலையம் வேண்டும் ஆதலால் தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டிற்கே ஆதரவு அகத்தியமாய் அதிகம் வேண்டும் ; காதலால் தாய்மொழியைக் காப்பதன்றிக் கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல ; தீதிலா திம்முயற்சி சிறப்புற் றோங்கத் திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி வாதெல்லாம் விலக்கிக் கலைவாண ரெல்லாம் வல்லநல்ல தமிழ்பாடி வாழவேண்டும். 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/161&oldid=1449918" இலிருந்து மீள்விக்கப்பட்டது