பக்கம்:தமிழன் இதயம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் இனியொரு மனிதர்க் கில்லை இத்தனைப் பொறுமை யென்னும் எம்பிரான் மஹமத் நீட்டும் சமரசக் கைகள் ஏந்த, சினமெனும் அரக்கர் கூட்டம் திரியென எரியும் ஞான தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. பேயென்றும் மாயை யென்றும் பெண்களை இகழ்ந்து பேசிப் பெருந்துற வடைந்த பேரும் பிழைபுரிந் தவரே யன்றோ ! , தாயென்றும் துணைவி யென்றும் தன்னுடை நோக்கம் காக்கும் சகதர்ம சக்தி யென்றும் சாரளா தேவி தன்னை நீ யென்றும் மகிழ்ந்து கொண்ட நிர்மல வாழ்க்கை தன்னை நினைத்திடுந் தோறும் நெஞ்சம் நெக்குநெக் குருகும் ஐயா தீயென்னப் புலனைக் காய்ந்த தீரனே ஞான வாழ்வின் தீபமே ராம கிருஷ்ண தேவனே போற்றி போற்றி. " ஜாதியில் உயர்ந்தோம்' என்னும் சனியனாம் அகந்தை நீங்கத் தாழ்ந்தவர் குடிசைதோறும் தலையினால் பெருக்கிவாரும் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/25&oldid=1448518" இலிருந்து மீள்விக்கப்பட்டது