பக்கம்:தமிழன் இதயம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் சோறும் துணியும்மட்டும் தேடினோமே துன்பம் குறைக்குமருள் கூடினோமா? கூறும் ராமகிருஷ்ணர் கதை படிப்போம் கூடும் கவலைகளின் முனை ஒடிப்போம். வீடும் மனையும்மட்டும் கட்டினோமே விமலன் அருளைக் கொஞ்சம் கிட்டினோமா? பாடும் ராமகிருஷ்ணர் சரித்திரத்தைப் படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை. மக்கள் மனைவிபொருள் நல்லதேதான் மற்றும் பெரியசுகம் இல்லையோ தான்? மிக்க பெரிய இன்பம் கொண்டபெரியார் மேலோர் ராமகிருஷ்ணர் கண்டுதெரிவோம். உடலுக் கணிகள் பல பூண்டோமே உயிருக் கழகு செய்ய வேண்டாமோ? கடனுக் கழுதுசெய்யும் பூசனையெல்லாம் கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/29&oldid=1448522" இலிருந்து மீள்விக்கப்பட்டது