பக்கம்:தமிழன் இதயம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் சாந்தியே காந்தி பல்லவி சாந்தியின் விரிவுரை காந்தியின் சரித்திரம் தமிழா மறக்காதே. அனுபல்லவி தேர்ந்தவர் ஞானமும் தெளிந்தவர் மோனமும் செந்தமிழ் நூல்களெல்லாம் சந்ததம் கோருகின்ற (சாந்தி) சரணங்கள் நாட்டைத் துறந்தவரும் வீட்டைமறந்தவரும் நானாவி தம்பல தானம் புரிந்தவரும் எட்டைத் தினம்புரட்டி எண்ணிப் படிப்பவரும் எல்லாவிதத்திலும் நல்லோர் விழைந்திடும் (சாந்தி) வேதங்கள் தேடுவதும் கீதங்கள் பாடுவதும் வேள்வி முயன்றதுவும் கேள்விபயின்ற துவும் காதம் பல நடக்கும் காவடி யாத்திரையும் கற்றவர் மற்றவரும் முற்றும் விரும்புகின்ற (சாந்தி) முந்திநம் முன்னவர்கள் நொந்து தவம்புரிந்து முற்றும் அறங்களினால் பெற்ற பெரும்பயனாம் இந்திய நாட்டினுக்கே சொந்தப் பெருமை என்று எந்தெந்த நாட்டவரும் வந்து பயிற்சிபெறும் (சாந்தி) 32 )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/33&oldid=1449370" இலிருந்து மீள்விக்கப்பட்டது