பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 சி.என். அண்ணாதுரை நோக்கம் என்ன? நீ தமிழனா? ஆமெனில், உமக்கேன் இந்தத் தமிழ்ப்பற்று உண்டாகவில்லை? தமிழைக் கண்டதும் ஏன் பதைக்கிறீர்? அது எழுத்தாக வந்தால் எதிர்க்கிறீர். இசையில் வந்தால் சீறுகிறீர். நீர் ஆரியராதலால் எதிலும் ஆரியம் இருக்கப் பாடுபடுகிறீர். ஆரியத்தை ஒழிக்க, தமிழர் எந்தத் துறையிலே பாடுபட முன்வந்தாலும் எதிர்க்கிறீர். இனி உமது எதிர்ப்பைக் கண்டு, தமிழன் தன் காரியத்தைக் கவனியாது இருக்கப் போவதில்லை. 'தமிழா! உன் தோள் வலிமை, தரணியெல்லாம் அறியாதோ!" என்றதோர் இசை கேட்டேன். தடுக்க முடியாத பேராவல் கொண்டேன். தமிழே விழைவேன். அதை வளர்க்கவே முயல்வேன்." இது ஊரார் பல்வேறு இடங்களில் உரையாடுவதன் சுருக்கம். தமிழர் என்ற சொல் கிளப்பிவிட்ட எழுச்சி, எங்கெங்கு ஆரியம் தங்கித் தொல்லை தருகின்றதோ, அங்கெல்லாம் அதனை அறுத்தொழிக்கக் கிளம்பிவிட்டது. அது கண்டு ஆரியர், தமது ஆதிக்கம் அழிவு படுவதைத் தடுக்க. இன்று அண்டமுட்டக் பார்க்கின்றனர். நிலவொளியைக் குலைக்குமாம்! கூக்குரலிட்டுப் கண்டு குக்கல் தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் கிடையாது. பாட வேண்டுமானால், தமிழ்ப் பாடகர்கள் கூச்சப்படுகின்றனர். தியாகய்யரின் கீர்த்தனங்களென்ன, சாமா சாஸ்திரியார் சுருதிகளென்ன, மற்றுள்ள தெலுங்குக் கீர்த்தனங்களைப் பாடினால் சங்கீத விற்பன்னர்கள் என்று பெயர் கிடைக்கும். தமிழில் என்ன பாடுவது! மளமளவென்று ஆறு தியாகய்யர் கிருதிகள் பாடிவிட்டு, சுரம்' இரண்டு கிருதிகளுக்குப் போட்டுவிட்டு, ராகமாலிகையை ரசமாகப் பாடிவிட்டு ஜாவளிக்குப்போய், கடைசியில் இரண்டு தமிழ் துக்கடாவைக் கிடுகிடுவெனப்பாடிவிட்டு, "நீ நாம ரூபகு" என்று மங்களம் பாடிவிடுவதைச் சங்கீத வித்வான்கள் சம்பிரதாயமாக்கி விட்டனர். பெரிய வித்வான் என்பதற்கு இலட்சணமே இதுதான் என்று கருதிவிட்டனர். இதனை