பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 19 தமிழோடு இணை பிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக் காலத்தில் மழுங்கி விட்டது. அதை விளக்கவே அ அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முனைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கலை வளர்ச்சித் துறையிலும், வீண் பகையையும் வெறுப்பையும் கிளப்ப வேண்டாமென்று இக்கூட்டத்தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம். இதற்கு ஈடாகுமா? வளைந்து வளைந்தோடும் அந்த அருவி, வெண் மணலைத் தழுவிக்கொண்டு. தழதழத்த குரலில் பாடுவது கேளீர்! எந்தப் பாட்டு இதற்கு ஈடாகும்? செடியும் கொடியும், தளிரும் இலையும், மலரும் கனியும் ஆடும் காரணம் அறியீரோ! அதோ, வீசும் காற்றுடன் கலந்து வரும் இசை கேட்டே அவைகள் ஆடுகின்றன. நடன சுந்தரிகள் போல! பச்சிளங்கன்று,தாயைக் கூப்பிடும் குரல் கேட்டீரோ? அதிலுள்ள இசை இன்பமே தனியானது! போர் வீரன், தனது உடலில் கவசமணிந்து, வாளை உறையினின்றும் எடுக்கிறானே, அச்சமயம் கிளம்பும் ஒலி, வீர உள்ளம் படைத்தோர்க்கு இசை? இம்மட்டுந்தானா? குழலா இனிது? யாழா இனிது? மக்களின் மழலையே இனிது. ஈடு எதிர் இல்லாத இசையாகும் இது! இங்ஙனம் மக்கள் இசை இன்பத்தை, ஒடும் அருவியில், வீசும் காற்றில், விளையாடும் கன்றின் குரலில், கொஞ்சும் குழந்தையிடம், வீரரின் செயலில், காதலியிடம் காண்பர்! களிப்பர்!! மலருக்கு மணம் இசை இன்பம்,இயற்கையிலும், தமது அன்புக்குரிய இடங்களிலும் இருக்கக் காண்பர். உள்ளத்தில் களிப்புக் கொள்வர்! பிறகு,ஓடும் அருவி பாடினது என்ன எனின்.