பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 21 அவர்களுக்கே கேடு வரத்தான் போகிறது என்று நிச்சயமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கை நமது மனதில் களிப்பை ஊட்டுகிறது. அறைகூவி அழைக்கின்றோம் "கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ்மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடைசெய்யுங்கள். தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை, ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள், தமிழன், தன்னைத் தமிழன் என்றுரைத்தால், சீறுங்கள். தமிழ் மொழியில் இசை இருக்கட்டும் என்றால், எதிர்த்துப் பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளையிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவுபடுத்துங்கள். சாப்பாட்டு விடுதிகளிலும், சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உமது ஆணவச் செயலை, திமிர் வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம்.ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான்; தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல் பட்ட புலிபோலச் சீறுவான். அந்தச் சீற்றம் கிளம்பி விட்டால், நாங்கள் 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' என்று பாடும் காலம் பிறக்கும்! தமிழ்நாடு தமிழருக்கே' என்ற எண்ணம் உருவமாக அமையும் காலம் தோன்றும். சேரனும், சோழனும், பாண்டியனும் இறந்துபடினும், அவர்கள் காத்தாண்ட செந்தமிழ் நாட்டில் தமிழராட்சி தோன்றும். ஆகவே ஆரியர்களே,ஆரம்பியுங்கள் உங்கள் போரை என்று நாம் அறைகூவி அழைக்கின்றோம். தமிழ் ஆட்சி ஆனால் தமிழ் இசைபற்றிப் பேசும்போது, சொத்தைக் காரணங்களை ஆரியர்கள் கூறுகின்றனர். அது நமக்குப்