பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சி.என். அண்ணாதுரை பண்டைப் பெருமை வாய்ந்த தமிழகத்திலே தமிழில் பாடல்கள் கிடையா; ஆகவே, விழியற்றவனுக்குத் தடி துணையாவதுபோல் வேற்று மொழியிலே, இசை பாடக் கேட்கிறான். இந்த நிலைமையை மாற்றி, மற்ற எந்நாட்டிலும் உள்ளது போலத் தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாட்டுக்கள் வளர வழிச்செய்யத் தமிழ் வள்ளல் முற்படுகிறார். அதை 'மித்திரனும்' அவரது மித்திரர்களும் கெடுக்க முற்படுகின்றனர். அது ஏன்? ஆரிய மித்திரர்கள் எண்ணம் அதுவல்ல! தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் இல்லை. வேறு பாடல்கள் உள்ளன. அதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்பது ஆரியரின் வாதம். தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டுமென்றால், தமிழ்ப் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தருவதாகவும், தமிழ்ப் பாடல்களைப் பாடும்படி ஊக்குவிக்கக் கழகங்கள் இருந்தால் முடியுமா? வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் முடியுமா? எனவே. அண்ணாமலை நகரில் கூடினோர். சங்கீதக் கழகங்களில் தமிழ்ப்பாட்டுக்களைத்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சங்கீத சபைகளில் பெரும்பாலும் தமிழ்ப் பாட்டுக்களையே அடுக்கி வித்வான்கள் அவற்றைப் பாடும்படிச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதற்குத்தான் எதிர்ப்பு இன்று தமிழ்ப் பாடல்கள் இருப்பினும், பாடுவதில்லை. பாடினாலும், கச்சேரியின் கடைசி பாகத்தின் துக்கடாக்களாகவே இருக்கும். பாடகரின் முழுத்திறமை யையும், இராக ஆலாபனத்திலும், பல்லவியிலும், கிருதிகளிலும் பாடிக்காட்டி ஓய்ந்த பிறகு, "வித்வாம்சாள்' களித்தான பிறகு விஷயமறியாத சாதாரண ஜனங்களுக்கு