பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 25 ஏதோ இரண்டொரு சில்லறை உருப்படிகள் பாடுவோம் என்று பாடகர், "சிக்கல் சிங்கார வடிவேலா உனை என்று பாடுவார். இல்லையேல், "பித்தா பிறை சூடி" என்பார். கச்சேரி முடிகிறது என்பதற்குத் தமிழ்ப் பாடல்களை அறிகுறியாக வைத்துக் கொண்டனர். இதற்குக் காரணம், சபை அல்ல; சபையினர் தமிழர். தெலுங்குக் கிருதிகள் அவர்களுக்குப் புரிவதில்லை. வித்வானுடைய அபார திறமையை சபையிலே பலர் அவருடைய முகத்திலே தோன்றும் பலவித பாவங்களைக் கண்டோ, அவருடைய அவலட்சண அங்க அசைவுகளைக் கண்டோ, துடையில் போட்ட தாளம், அவிழ்ந்த குடுமி, நெகிழ்ந்த ஆடை, பக்கவாத்தியக்காரருக்கும் வித்வானுக்கும் நடக்கும் பார்வைகள், கனைப்புகள், கண் சிமிட்டல்கள், கால் தட்டுதல் இவைகளின் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முன் வரிசையிலே உள்ள சிலருக்கு வித்வானின் அருமை தெரிந்திருக்கும். ஆனால் சபை, முன் வரிசையோடு முடிந்து விடுகிறதா? சபையினர் கவனிக்க முடியாத -ஏனெனில், தெரிந்து கொள்ள இயலாத மொழியிலே பாடல்களை வித்வான்கள் பாடுவதுதான், "வித்வத் இலட்சணம்" என்ற தப்பு எண்ணம் வளர்க்கப்பட்டு அத்தகைய பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் கழகங்களே அதிகரித்து. அத்தகைய பாடல்களையே போற்றும் சங்கீத சபைகள் வளர்ந்ததனால்தான் தமிழ்ப் பாடல்கள் வளரவில்லை. தமிழ்ப் பாடல்கள் அதிகரிக்க வேண்டுமானால், புதுப்பாடல்கள் இயற்றப்பட்டு, அவைகளைக் கற்றுக் கொடுக்கக் கழகங்கள் உற்சாகத்தோடு முன்வந்து, அத்தகைய பாடல்களைப் பாடும்படி சங்கீத சபைகள் ஊக்குவித்தால்தான் முடியும். தமிழிலே புதுவைக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் இயற்றிப் புத்தகக்கட்டு நிலையத்தில் தங்கினால் பயன் என்ன பாடகர்கள் அவைகளைப் பயில வேண்டும்; பாட வேண்டும்.