பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி தமது 29 நம்மவரைப் புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆட்சி பீடத்திலே ஆரியரை சர்வாதிகாரியாக்கினர். தமிழர் தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்பு தன்னுணர்வைத் தந்தது. தன்னைத் தான் அறியத்தொடங்கிய பிறகு, தமிழன் தான் இழந்தவைகளைத் தேடத் தொடங்கினான்; தேடிக் கொண்டும் இருக்கிறான். அழிவுக்குக் என்ன காரணம் என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்ததுபோல் இன்று தமிழரிடையே ஒரு எழுச்சி உண்டாகியிருக்கிறது. இந்த மறுமலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கிறோம். தமிழ்மொழியில் துவங்கி தமிழ்நாடு என்ற எண்ணம்வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது. வழி தவறி அலைந்தவன், நேர்வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது, செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்றே உறுதி கொள்ள வேண்டும்.மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா? மறுமலர்ச்சி இத்தகைய மறுமலர்ச்சி, இன எழுச்சி - இயல்பு, இது போல் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. ஆனால் இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை. 15,16-வது நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலே, பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின. பிரிட்டனிலே டியூடிர் (Tudor) மன்னர் காலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத்துறையிலே சீர்திருத்தம். மக்கள் மன்றத் துறையிலே மாறுதல்கள், கலையிலே ஓர் புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளிவந்தன. தன்னாட்டுணர்ச்சி, தன் மொழிப்பற்று, தன்மானம் ஆகியவைகள் தாண்டவமாடின. பின்னரே பிரிட்டன்