பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 41 தியாகய்யரின் ராமரசத்தை, அருணாசலக் கவிராயரின் தமிழ்க் கீர்த்தனங்களில் காண ஆரியர் மறுப்பர். கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் பாடல்களும், சித்தர்களின் பாடல்களும் சுப்பராமரின் தமிழ்ப் பதங்களும் ஆரியருக்குப் பிடிக்கவில்லை. ஆகவேதான் தமிழிலே பாடல்கள் ஏது என்று கேட்கின்றனர். தோழர் மாரியப்பசாமி எனும் இசைச் செல்வர், தியாகய்யர் கீர்த்தனை மெட்டுகளிலேயே செந்தமிழில் கிருதிகள் அமைத்து, இனிய முறையில் பாடுகிறார்! ஆரியருக்கு அது பிடிக்காது; அவர்கள் அசல் ஆரிய ரசமே தேடுவர். பக்தி என்ற ரசத்தையும் ஆரியத்தோடு கலந்து பருகுவரேயன்றித் தமிழோடு கலந்து பருகச் சம்மதியார். காரணம், அந்த ஒரே மொழிதான் பரந்த இந்தியாவில் ஆரியப் படையெடுப்பை. தாக்குதலைப் பொருட்படுத்தாமல், பணியாமல் சீரிளமைத் திறனோடு விளங்குகிறது. அத்தகைய தமிழ், இசையில் மீண்டும் ஆதிக்கம் பெறுமானால், தமது கதி என்னாகுமோ என்று ஆரியர் பயப்படுகின்றனர்! தமிழில் இசை வளரக் கூடாதெனத் தடுக்கின்றனர். தமிழனுக்குத் தமிழ் இசையைப் பெற உரிமை உண்டு! அதைத் தடுக்க ஆரியருக்கு உரிமை இல்லை! ஆயினும் ஆரியர் தடுக்கின்றனர் தமிழரே, உமது கருத்து என்ன? என்ன செய்யப் போகிறீர்? என்று தமிழரைக் கேட்கிறோம். நாம் பெருங்கூட்டம்! அஃதோர் சிறு கும்பல்" என்றோர் இனிமை ததும்பும் கருத்தை. இளமையின் முறுக்குடன் கலந்து கவியாக உலகினோர்க்குக் கூறினார் ஷெல்லி என்பார். கவியின் கருத்தை வெறும் எழுத்துக் கோவையாகக் கொண்டு நோக்குதல் கூடாது: பலன் தராது. ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் போதும்! மான் மந்தையைச் சிறு ஒநாய்க் கூட்டம் விரட்டியடிக்கும். பாம்பு படையைக் கலக்கும். ஷெல்லி கூறிய கருத்து இங்கு பயன்