பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 43 போதிலும், தமிழர் அஞ்சத் தேவையில்லை' என்று குமார ராஜா சர் முத்தையாச் செட்டியார் அவர்கள் கூறிய போதும், மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த மக்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததைக் கண்டோர் அறிவர், தமிழரிடை பிறந்துள்ள புத்துணர்ச்சியை! தமிழிலே சாஹித்யம் உண்டா? உண்டு என்றனர் சொற்பொழிவாளர்கள். பாடிப் பாடிக் காட்டினர் இசைச் செல்வர்கள். கேட்டுக் களித்தனர் மக்கள். கேட்டது போதாதென மேலும் மேலும் தமிழ்ப் பாடல்கள் பாடும்படி கேட்டனர். இது போதும்; தமிழ் இசையை எதிர்க்கும் பேர்வழிகளின் கண்களைத் திறக்க! கருத்தைத் துவங்க! கிளர்ச்சியின் சிறு பகுதி இந்தப் பிரச்சினை தனிப்பட்ட தென்றோ, திடீரெனத் தோன்றியதென்றோ நாம் கருதவில்லை. இசை விஷயமாக எழுப்பிய இந்தக் கிளர்ச்சி, ஒரு மாபெருங் கிளர்ச்சியின் சிறு பகுதி: தமிழகத்திலே எழும்பியுள்ள மறுமலர்ச்சியில் ஒரு பாகம். இதனை எதிர்ப்போரின் செயலும். மறுமலர்ச்சியைக் கண்டு மனந்தாளாது எதிர்த்தொழிக்க எண்ணும் கூட்டத்தின் கொடுமைமிக்க செயல்களில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம். எனவே, இந்தச் சமயத்தில் தமிழர் பொதுவாக உள்ள பெரிய பிரச்சினையைச் வேண்டுகிறோம். சற்றுக் கூர்ந்து கவனிக்க இன்று தமிழருக்கு எழுச்சி, இசை விஷயமாக மட்டும் வத்ததில்லை! எதிர்ப்பும் அந்தத் துறைமில் மட்டும் ஏற்படவில்லை. எத்தனையோ கிளர்ச்சிகள் மொழியிலே கலப்பு வேண்டாம் என்றோர் எழுச்சி.