பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி இன்றுள்ள நிலைமை 47 இன்றுள்ள நிலைமை அங்ஙனமில்லை. தமிழ்நாட்டிலே தமிழன் தாழ்ந்த ஜாதி என்று தமிழன் படிக்கும் சாஸ்திர இதிகாச புராணங்கள் கூறுகின்றன. தமிழனின் பணத்தால் நடைபெறும் நீதிமன்றங்களில் அதற்கேற்பவே தீர்ப்புகள் தரப்படுகின்றன. தமிழனுக்குத் தமிழ்நாட்டிலே தமிழரின் பணத்தால் கட்டி. தமிழன் பணத்தால் பராமரிக்கப்படும் கோயில்களிலே தமிழருக்குச் சம உரிமை இல்லை; உண்டிச் சாலைகளிலேயும் இல்லை. தமிழ்நாட்டிலே, தமிழனுடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிபோல் படர்ந்து விட்டன. தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்பதில்லை; மோரிசுக்கும், ஜான்சிபாருக்கும், நெட்டாலுக்கும். மலேயாவுக்கும், பர்மாவுக்கும், இலங்கைக்கும் சென்று உழைத்து உருமாறிச் சிதைகிறான். வியாபாரம் தமிழனிடம் இல்லை. கலை தமிழனுடையதாக இல்லை. தமிழனுக்கு இழிவைத் தரும் கற்பனைகளும், அடக்குமுறை சட்டங்கள் கொண்ட ஆபாசங்களுமே கலையாகத் தரப்பட்டுள்ளன. இங்ஙனம் மொழி, கலை, சமுதாயம், பொருளியல் முதலிய எல்லாத் துறைகளிலும் தமிழன் இழிவுபடுத்தப்பட்டு வருவதன் காரணம். சிறு கும்பலொன்று' ஆதிக்கம் செலுத்தி வருவதனால்தான். எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே' என்று பாரதியார் பாடிய பிற்பாடு கூட கால மாறுதலை” அறியாமல் இவர்கள் நடப்பது வெறும் அறிவீனம். ஒரு சேர்ந்து கொண்டு தங்கள் சுயநலத்திற்காக சிலர்