பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள் 95 அரசர் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், தானை வீக்கற விரித்தும் போருக்குச் செல்கின்றனர். எனினும், பித போர் வீரர்களைப் போன்றே இவர்களின் உடையும் அமைகின்றதே தவிர, வேறுபாடு எதையும் இவர்களின் உடையிலோ கடுத்தும் முறையிலோ காணக் கூடவில்லை. அரசர்கள் உடைகளைக் காண அவர்களின் உடைகள் சிறந்த உடைகவாக அமைந்தன என்பதும், இடையாடையினை நிலத்தோயும் அளவிற்கு உடுத்தியும், மேலாடையுடனும் காணப் பட்டனர் என்பதும் தெளிவுறுகின்றது. மன்னன் புலவருக்கும் இரவவர்க்கும் கொடுக்கும் நிலையில் மடி, துகில், கலிங்கம், அறுவை, வேறுபட்ட உடை போன்றன அமைகின்றன. வேறுபட்ட கூடை என்பதற்குத் தெளித்த விளக்கம் இல்லை. பல்வேறு வகையான உடைகளைக் குறிக்கும் சொல்லாக இதனைக் கருதலாம். இவ்வுடைகள் பற்றி எண்ணுங்கால் இவை அனைத்தும் மன்னனது ஆடைகளாகவும் அவன் பிறருக்குக் கொடுப்பதற் காகத் தனித்து வைத்திருந்தளவாகவும் கருதலாம். தவ்வரைப் பொங்கு துயீனைக் கொடை செய்யும் தன்மையும் (புறம்.398) தனக்குத் தேவை இல்லாத வற்கலையைத் தன்னைக் காணவரும் முனிவர்க்குக் கொடுக்க அரண்மனையுள் வைத்திருப்பர் என்ற கம்பன் உரையாசிரியர் கூற்றும் (கம்ப. 1919) இல்வெண்ணங் கட்கு அடிப்படையாகின்றன. போர் வீரர்கள் கச்சை, கவசம் இரண்டும் போர்வீரர்களின் பொதுவான தொகு உடையாகும். இதனைச் சங்ககாலம் முதல் நாம் காளவாம். சங்க இலக்கியம் இவற்றுடன் சுற்று வீங்கு செறிவுடை (யெரும், 73) கொடுத்திரை ஆடை (புறம், 275) இவற்றைத் தர, கிந்தாமணி வட்டினையும் குனாமணி கவிங்கத்தையும் இவர் கனின் உடையாகக் காட்டுகின்றது. சுற்று வீக்கு செறிவுடை என்னும்போது பக்கங்களில் இறுகக் கட்டப்பட்ட உடையாக இது அமைத்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. 'வளைந்து திரைந்த ஆடையும்' என்ற பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/108&oldid=1498921" இலிருந்து மீள்விக்கப்பட்டது