பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்-உடுத்தும் முறைகள் 99 போர்த்தும் காணப்பட்டனர் எனக் குறிப்பிடும் தன்மை, இல்வுடையினை இவர்கள் உடுத்திய தன்மையைப் புலம் படுத்தும். சமணர் ஆடையையும் துறந்த நிலையினைச் சீவகனின் துறவுவழி, மணியுறை கழிப்பது போல் பல்கலப் பணிவருப்பைந்துகிவீகப் பாற்கடல் அணிபெற வரும்பிய வருக்களாமௌத் திணிநிலத் தியன்றதோர் நிலகமாபீனான் எனச் சிந்தாமணி தவிலும். (3028) பொதுமக்கள் எஞ்சியோரைப் பொதுமக்கள் என்ற நிலையில் நேரக் லாம். பொதுமக்களை உயர்நிலை மாத்தர் தாழ்நிலை மாத்தர் என அவர்கனின் வாழ்க்கைத் தரத்திற்கேற்பக் கொண்டு அவர் கனின் உடை பற்றிய விளக்கங்கள் இவண் தவிலப்படுகிறது. உயர்நிலை மாத்தராக ஐந்நிலத் தலைவன், செல்வந்தர், அரசனைச் சார்த்தோர், தாழ்நிலை மாந்தராக மறவர், வேடர் போன்றோர் அமைகின்றனர். உயர் நிலை மாந்தர் சங்க இலக்கியத்தில் தலைவனின் உடையாகத் தானை கலிங்கம் காட்டப்படுகின்றது. இருபிறப்பாளராகிய அந்தணர் காழ உடையினராகக் காட்சி தருகின்றனர். பெருங்கதையில் அந்தணர் வெண்டுகிலுடன் காட்டப்படுகின்றனர். பெருநிதிக் கீழவர் கலிங்கம் புரளும் தானையுடன் தோற்றம் தருகின்றனர். சிலம்பில் பெருநிதிக் கிழானின் மகனான கோவலன் தன் உடையைக் கூறை எனச் சுட்டுகின்றான். பாண்டியனது பொற்கொல்லன் மெய்ப்பையுடன் காட்டப் படுகின்றான். பெருங்கதையில் கணக்கர், திணைத்தொழிலாளர் போர்வை யுடனும் தெடு துண்ணாடையுடனும் காட்டப்படுகின்றனர். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/112&oldid=1498945" இலிருந்து மீள்விக்கப்பட்டது