பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர்ஆடைகள் இவற்றால் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மாந்தரின் சிறப்பியல்புகளையும் உணர்த்தி நிற்பதில் முதன்மை பெறுவன வற்றுள் .இடைவும் ஒன்று எனல் மிகையில்லை. 2 இத்தகைய பெருஞ்சிறப்புடைய ஆடை பற்றிய கல்வி, நமக்குத் தரும் மாந்தர் வாழ்க்கைக் கூறுகள் பல. 1. கடையின் தன்மை, உடுத்தும் முறை 2. ஆடைத் தொழில் அறிவு 3. மக்களின் பழக்கவழக்கங்கள், கலையுணர்வு, தம்பிக் கையுணர்வு, நாகரீக உணர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இக்கூறுகள், பல்வேறு இனத்தாரிடையே அமைந்து டேக்கும் ஒற்றுமைகள், வேற்றுமைகள், பிற நாட்டார் தொடர்பால் ஏற்பட்ட பண்பாட்டுப் பரிமாற்றங்கள் போன்றனவற்றையும் புலப்படுத்துகின்றன. ஆடையின் தோற்றம் மக்கள் வாழ்வு முறையினைத் தெளிவுபடக் காட்டுவழில் ஒரு கூறான இடையில் தோற்றம் பற்றிய வரலாறு இன்றைய நிலை யிலும் தெளிவாகாத ஒன்று. அறிஞர் பலர் பல எண்ணங்களைக் கூறிச் செல்கின்றனர். இவற்றுள் தட்ப வெப்ப நிலையைக் காரணமாகக் காட்டுதல் பரவலான கருத்தாகத் தென்படுகிறது. ஆக்னெஸ் ஆவஸ் உடையின் தோற்றம் சூழலைப் பொறுத் துப் பலபடியாகத் தோன்றி இருக்க வேண்டும் என்பர். நட்ப வெப்ப நிலை என்று சொல்வது ஆய்வின் முதற்படிதான் என்று இதற்குப் பல விளக்கங்களையும் தவில்வார். ஆடையின் தோற்றம், அணிகலன் என்ற நிலையில் அல்லது ஒரு இனத்தா கிடம் இருந்து இன்னொரு இனந்தாரைப் பிரித்தல் அல்லது தனது தகுதி காட்டல் அல்வது மந்திர சக்தியில் உள்ள நம்பிக்கை பொன்ற காரணங்களாகலாம் என்பர். தட்ப வேப்பநிலை மட்டுமன்றி, மாந்தர் இனத்தை விலங்கு களிடம் இருத்துப் பிரித்தலில் இருந்தும் தோன்றியிருக்கலாம் 4. So we have seen clothing may have started as ornament or to distinguish one tribe from another or to show rank or because certain things were believed to have magio qunli ties.'" = 'The Story of Clothes, Agnes Alien, Pp. 15, 16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/15&oldid=1498766" இலிருந்து மீள்விக்கப்பட்டது