பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 13 போன்றோரின் நூல்கள் குறிப்பிடத் தக்கன. இத்தியரின் உடைகள் வெல்வேறு காவநிலைகளில் எத்தன்மையன் என் பதைப் பல மூலங்கள் வழித் தெளிவுற எடுத்தியம்புகின்றன இவை. ஆயின் தொன்றுதொட்டே பெரும் சிறப்புடன் வாழ்ந்து உலகெங்கும் தங்கள் பெருஙமயைப் பரவச் செய்த தமிழரின் ஆடையினைப் பற்றியதோரு தனித்த நூல் ஒன்றினையும் நாம்' காணக், கூடவில்லை. இந்திய வரலாற்றில் தமிழரின் ஆடை வரலாறு இடம் பேறிறும் அவை முழுமையுணர்வினை நல்க வாய்ப்பில்லாமையால் ஒரு சில எண்ணங்களையே உரைத்து அமைகின்றன. அ. மீராமுகைதீன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் ஆடை வகைகள் என்ற வெளிவராத பொருட்கட்டுரை ஒன்றும் (கேரளப் பல்கலைக் கழகம் 1971.) மற்றும் கில தனிக் கட்டுரை களுமே தமிழர் உடை வகைகளை விளக்குவன. பொருட்கட்டுரை சில குறிப்பிட்ட இக்கியங்கள் இயம்பும் ஆடைகளை வீளக்கு இன்றது. தொடர் கட்டுரையாக, பி. எல். சாமியின் 'சங்க இலக்கியத்தில், ஆடை அணிகலன்கள்' என்ற கட்டுரையிலைக் (செந்தமிழ்ச் செல்வியில் வெளியந்தவை) காண்கின்றோம். ஆடைபற்றிய பல்வேறு சொற்களின் வரலாற்றையும் இவர் சொல்லிச் செல்லும் வீதம், சில நிலைகளில் மேலும் ஆய்வுக் குரியதாக அமையினும் ஆய்வாளருக்கு மிகுந்த பயனுடையது. திருமதி. நியாகராசன், ரா. பி. சேதுப்பிள்ளை போன்ற அறிஞர் பலரும் ஆடைபற்றிய கருத்துகளைச் சொல்லிச் செல் கின்றமையும் சுட்டத் தக்கது. இலக்கியம் தரும் செய்திகளை விளங்கிக் கொள்வதற்கும், விரித்துக் கொள்வதற்கும் கல்வெட்டு ஆய்வாளர் குறிப்புகள் சிறந்த துணையாகின்றன. ஆய்வு நோக்கம் உள்ளதன் அணுக்கம் ஆய்தல் என்பார் தொல்காப்பியர். ஆய்வானது புதியது காணல், தெரித்ததன் மேன்மேற் காணல், முன்னைய குறைகளை நீக்கள், சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்தல், குறிப்பிட்ட பயன் கருதிச் செய்தல், அறிவுச் சிக்கலை விடுவித்தல் என்ற எண்ணங்களின் அடிப்படையில் அமைதல் தேவை, எனவே ஈண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/26&oldid=1498798" இலிருந்து மீள்விக்கப்பட்டது