பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் 1. தமிழர் ஆடைபற்றிய நூல்,இன்மையை நீக்குதற்கும் 2. தமிழர் ஆடைபற்றிய அறிவைப் பெறுதற்கும் 3. அதன்வழிப் புலவாகும் தமிழின் வாழ்வியற் கூறுகளை அறிதற்கும் தமிழர் ஆடைகள் பற்றிய செய்திகள் ஆய்வு செய்யப்படுகின்றன. 14 ஆய்வின் தன்மை தொல்காப்பியம் முதற்கொண்டு கி. பி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான சில குறிப்பிட்ட இவக்கியங்கள் உணர்த்தும் ஆடைகளை அடிப்படையாசக் கொண்டு இவ்வாய்வு அமை கின்றது. எடுத்துக் கொண்ட இலக்கியங்கள், தொல்காப்பியம்,எட்டுத் தொகை,பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி, நாலாயிர தீவ்லியப் பிரபத்தம், தேவாரம், தந்திக் கலம்பகம், கம்பராமாயணம், சூளாமணி கல்லாடம், முத்தொன் னாவீரம், மூவகுலா, தஞ்சைவாணல் கோவை, கலிங்கத்துப் பரணி, அம்பிகாபதிக் கோவை, பெரிய புராணம் ஆகியன. வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையும் இவ்வாய்வு இற்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதலாம் இயல் உடைபற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு. இந்தியாவின் பிறபகுதி மாந்தர் குறித்த, ஆடையுடன் தொடர்புடைய பல சொற்களைப் போன்று, தமிழகும் எண்ணற்ற சொற்களைக் கொண்டிருந்தனர். அவற்றுள் பெரும் பாலனவற்றைக் கலைச்சொல்வகராதி என்னும் பகுதியாக-இந் நூல்இறுதியில் காணவாம்.இவண் தங்கள் ஆடைகளைக் குறித்து, தமிழர் வழங்கிய சொற்கள் என்னென்ன? அவை பல் நிலைகளில் பெயர் பெற்றமை,பல் மாற்றத்திலும் மாற்றமடையாத சில சொற்களின் தனிமை,சூழல் காரணமாகத்திரிந்த மாற்றமடைந்த சொற்களின் இயல்பு போன்ற பலவற்றையும் காணலாம். இரண்டாம் இயல் தமிழர் உடைசன்-உடுத்தும் விதங்கள் உடை உடுத்தும் முறை என்று நோக்க, ஒரு குறிப்பிட்ட இளத்தாருக்கு நாணிகமாகத் தோன்றுபவை மற்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/27&oldid=1498801" இலிருந்து மீள்விக்கப்பட்டது