பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள் - ஓர் ஆய்வு 35 பற்றிய விளக்கங்கள், இக்காலத்தில் இதன் செலவாக்கு உச்ச நிலையில் இருந்திருக்கவேண்டும் என்னும் உணர்வினைத்தருவன வாகும். கம்பனின், ஆவியந்துகில் (சுந்தர.340) சத்த நுண்டுகில் (பால 873) நிலவிளக்கிய துகில் (சுந்தர.1206) போன்றவற்றைக் காண வாம். சூளாமணி, மின்னுப் பூத்துகில் (537)கோடி மேன்றுகிவ் (624) போன்றவற்றைக் காட்டும். அடியார்க்கு நவ்லார் கூறும் துயில் வருக்கத்துன் பல (14:108) அவர் காலத்தனவே. தஞ்சைவாணன் கோவையில், வரைப்பால் மதுரத்தமிழ் தெர்வாணன் தென்மாறைவையை துரைப்பால் முகத்தன்ன அண்டுகிலாய் (217) என வையையாற்றின் துரையையும் பாலையும் முரந்து கொண்டாலொத்த நுண்ணிய தூலால் செய்த துகில் எனப் புலவர் உலமீக்கும் தன்மை துகிலின் மென்மைக்குச் சிறந்ததோர் காட்டு) ஆகின்றது. இவற்றுடன் மணம் போன்ற மங்கலப் பொழுதுகளில் துகிலை உடுத்திக் கொள்ளும் தன்மையும் (பெருங். 25:78, வேக, 617, அம்ப. 1280) இதன் மேன்மையினை உறுதிப்படுத்தும். இலக்கியக் காட்டுகளில் மிகுதியானவை இதன் வெண்மை குறித்தும், சிற்சில வண்ணம் பற்றிய உணர்வையும் தந்து அமை கின்றன (திருமுருகு -15, 296, சிலப். 6:88,பெருங். 1:42:145, சிந்தா. 431, 1783, கம்ப. 1885.கந்தர.1085). பூந்துயில் என்று இது கட்டப்படும் தன்மைக்கு, பூத்தொழில் நிறைந்த ஆடை என்பதே உரையாசிரியர்களின் உரையாக அமை கின்றது. பூப்போன்ற மென்மையான துகில் என்றதொரு பொருளையும் இதற்குக் கொள்ளலாம், 4 ஜூலின் மென்மையைக் குறித்த எண்ணங்கள் பல காணப் படுகின்றன. இன்றும் பூந்துவாலை, பூந்தளிர் என்பனவற்றை மென்மைப் பொருளில் கொள்கின்றோம். எனினும் பிற பூக்கள் நிறைந்த ஆடைகளான பூங்கலிங்கம், பூவிரிக்கச்சை போன்ற வற்றைக் காணமென்மையான துதியில் பூப்போட்டு அழகூட்டி னர் என்றும் இருபொருட்களையும் பூந்துகிலுக்குக் கொள்ளல் பொருத்தமாக அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/48&oldid=1498735" இலிருந்து மீள்விக்கப்பட்டது