பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 தமிழர் ஆடைகள் போன்றோரைச் சங்க இலக்கியம் காட்டுகின்றது. லெப்பதி காரத்தில் வணிக பூதம் காளகஞ் செறிந்த உடையினனாகக் காட்டப்படுகின்றது. (22:98). காழக மூட்டப் பட்ட காரீரூட் டுணியை ஓப்பான் என வேட்டுவனைத் திருத்தர்க தேவர் தம் சிந்தாமணியில் இயம்புவார் (1250). எனவே அனைவராலும் பயன்படுத்தப்பட்டடுநாடு துணி இது என்பது புலனாகின்றது. காளகம் சேர்த்த உடை, காழக மூட்டப்பட்ட காகிருட்டுணி என்ற எண்ணங்களை நோக்க, காழகம் கறுத்த ஆடை என்பதும், கருமை யூட்டப்படுதல் இதன் இயல்பு என்பதும் விளக்கமா கின்றது.'" மேலும் காழகம் சேர்ந்த, காழகம் ஊட்டப்பட்ட போன்ற எண்ணங்கள் இவ்வுடையின் தொழில் தன்மையையே இயம்புகின்றன. எனவே முதலில் கானகத்தில் இருந்து வருவிக் கப்பட்டது காழகம் என்பதும் பின்னர் தமிழர் தம் நுண்ணறி வினால் தாமே இதனை உருவாக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதும் ஈண்டு எழும் எண்ணங்கள். இதன் நிறத்திற்கேற்ப இதனை உடுத்திய மாந்தரும் சாதாரணமானவர்களாகவே கட்டப்படல்சிறப்புடைய ஆடை அன்றுஇதுஎன்பதை யுணர்த்து கின்றது. அதிக பயிற்சியின்மையும், பின்னர் இதனைப் பற்றிய எண்ணமின்மையும்.இக்கருத்தினை புறுதிப்படுத்தும். அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வகையுள் ஒன்றான புங்கர்க்காழகம் என்ன துணி என்பது புலப்படவில்லை. கானக வகையாகவும் இருந்திருக்கலாம். 11.மடி மடித்து வைக்கப் பெற்றமையின் நெய்த துணியின் பெயர் மடி என்றாயிற்று. இது திராவிட மொழிச்சொல் என்பதைத் 28. தெடுங்கரை காழக நிலம்பரலுறுப்ப என்னும் மதுரைக் காஞ்சியடிகளும் (598) கரிய மணலை யுடைய நிலத்தைச் சுட்டல் இதனுடன் இயை புடைய ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/57&oldid=1498616" இலிருந்து மீள்விக்கப்பட்டது