பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு கச்சியாப்புறுத்த கால் வீங்கிள முலை பெரும். 1.34:202 கருங்கணின மூலை கச்சற வீக்கி - சீவக. 2116 என்பன மார்புக் கச்சினையும் காட்டும் சிவ சான்றுகள், 53 இன்றைய நிலையில் மகளிர் அணியும் மார்பாடை (பிரா) ஆடவர் பயன்படுத்தும் வார் (பெல்ட்) போன்று இதனைக் கொள்ளலாம். மேலாடை இன்றியமையாததென எண்ணாத மகனீர்; புதுமையாக ஏற்றுக்கொண்டமையின் வம்பு எனவும் வழங்கப் பட்டிருக்கலாம். அம்பளணத் தடைஇய மென்றோன் முகிழ்முலை வம்பு.விரித்தியாத்த வாங்கு சாய்நுசுப்பின் - நெடு. 149-50. வப்பு வீக்கி வருமுலைவுட் கரத்து-வேக. 633. வம்பிள்பொங்கும் கொங்கை கமக்கும்வலி இன்றி-கம்ப. 1002 போன்ற இதன் பயிற்சி நிலைகள், மார்பில் இறுக்கிச் கட்டப்பட்ட,இதன் தன்மையை இயம்பும், உவமைகள், அடைகள் போன்றன இதனுடன் கட்டப்படாக் காரணத்தால் கச்சு போன்றதொரு ஆடை என்பது மட்டுமே விளக்கமாகின்றது. கச்சு, வம்பு போன்று வரித்து கட்டப்பட்டமை, வார் என்ற சொல்லாக்கம் பெற வாய்ப்பு அனிகின்றது. வார் முவை முற்றத்தை மறைத்தல் காரணமாகவும் (அகம். 261) இப்பெயர் அமைந்திருக்கவாம். ஆடவுக் கட்டும் கச்சினை இன்றும் வார் என்னும் வழக்கு சுச்சு, வார் ஆகியவற்றின் தொடர்பினையே காட்டும். இன்று இச்சொற்கள் வழங்கப்படவில்லை. இரவிக்கை ஜெம்பர் சட்டை, பாடி, பிரா போன்ற பல பெயர்கள் இப்பொருளில் அமைகின்றன, 21. மெய்ப்பை பண்டைத் தமிழன் வரலாற்றில் சட்டை அணியும் பண்பாடு இடம்பெறவில்லை, பிற நாட்டார் தொடர்பு இப்பழக்கத்தை அவனிடம் உருவாக்கியது. சட்டை பற்றிய சொற்கள் ரட்டையுடன் தமிழரின் தொடர்பினை விளக்கி நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/66&oldid=1498642" இலிருந்து மீள்விக்கப்பட்டது