பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 59 பெருங்கதை மீக்கோள் என்றும் (2.15:126), வடகம் என்றும் (1:53:145) மேலாடையைக் குறிக்கின்றது. இன்று மேலாப்பு, மேலாக்கு, மேலாடை என்ற வழக்குகள் உள்ளன; மேலாடை யின் பின் அமையும் பகுதி முன்னால் வரும் தன்மை முந்தானை, முந்தாணி என்ற பெயர்களையும் இதற்களித்துள்ளது. சித்தாமணியிலும் வடகம் சுட்டப்படுகின்றது (462). வடகத்தொடு உடுத்த தூசும் மாசுஇல் நீர் தனைப்ப. கம்ப. 945. எனக் கம்பனும் காட்டுகின்றான். வடகத்தைத் துகில் வகையுள் ஒன்றாகக் காட்டுவார் அடியார்க்கு நல்லார் (சிலப். 14:108), எனயே துணியின் வகையாகிய வடகத்தின் பிறப்புக்கருதி இதனை மேலாடைக்குப் பயன்படுத்தியிருப்பர் என எண்ணத் தோன்றுகின்றது.இன்று இவ்வழக்கு இல்லை. நச்சினார்க்கினியர் தம் உரையில் வடகத்தினை, அத்தவாளம்; உடைவிசேடம் (சீவக. 462) என்பர். இப்பல சொற்களிலும் இன்றும் பயிற்சியில் நிலைத்திருத்தல் உத்தரியத்திற்கே உரியது. அந்தணர், சோமன்உத்தரீயம் என்று வேட்டியையும் மேலாடையையும் கட்டுகின்றனர். தவிர நேசியல், உறுமால், அங்கவஸ்திரம், மேல்துண்டு என ஆடவரின் மேலாடை யினையும், முந்தானை, முந்தசணி, மேலச்சீலை, போன்ற சொற் கள் பெண்டிர் மேலாடையினையும் குறித்து வழங்குகின்றன. அதிகப் பயன்பாடு காரணமாக ஆடவர் மகனீர் மேலாடை தனித்த பெயர்களால் இன்று கட்டப்படுகின்றது. இவை பொது நிலையில் மேலாடையைக் குறிக்க வழங்கின எனினும் இவற்றுள்ளும் வேறுபாடுகள் இருந்திருக்கவேண்டும். சான்றாக நேரியல், உறுமால் இரண்டையும் நோக்கலாம். இவை பொருளால் ஒன்றுபடினும் ஆளவு வேறுபட்டனவாக அமைவன நீளம் அகலம் வேறுபட்டு இருத்தல் தேரியல் எனப்படும். அகலம் வேறுபட்டு இருத்தல் நேரியல் எனப்படும். நீளம் அகலம் ஒரே அளவாயிருத்தலை உறுமால் என்பர். 23. போர்வை நீளம் போரிவை, படாம், கம்பவம் என்ற சொற்கள் தமிழரால் போர்வையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன. சங்கத் தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/72&oldid=1498652" இலிருந்து மீள்விக்கப்பட்டது