பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 61 போர்வைகளுன் மயிரினால் ஆனவற்றை மட்டும் கம்பலம் என்று வழங்கியிருக்கின்றனர். மயிர் ஆடையற்றிய எண்ணங்கள் பல இருப்பினும், அலை தனிந்த பெயர்களால் கட்டப்படவில்லை என்பதும், கம்பளம் என்று வடதாட்டார் கட்டும் தன்மையும் இது வடசொல்லாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தைத் தருவன. இன்று கம்பளம், கம்பனி என்று வழங்குகின்றது. போர்த்தலால் பெயர் பெற்றது போர்வை. முதலில் தோற் போர்வையையும் (புறம், 387, 359), பிள்ன்ரி துணியினைக் குறிக் கவும் " வழங்குகின்றது. சான்றாக, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பழமொழி. 74) 'அந்துகிற் போர்வை அணிபெற தைடு' (கலித். குறின். 65) போன்ற பல எண்ணங் களைக் காண்கின்றோம். பலவகைத் துணிகளினாலும் போர்வை உருப்பெற்றது எனினும், மயிர்ப்போர்வை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. மயீர் ஆடை பற்றில் எண்ணத்தியைச் சிலம்பு கட்ட (5;16) பெருங்கதை, சிந்தாமணி இரண்டும் இதன் பெருஞ்சிறப்புகளை இயம்புகின்றன. எலிப்பூம் போர்வை எனவும் (பெருங். 1.47:17)) எலிமயிர்க் கம்பலம் (சீவக. 2086) என்றும் கட்டப்படும் இவை, மயிர்ப்படாத் இனை விடவும் சிறந்தது என்பதும் புலனாகின்றது. ஓடுச் சொல் உயர்பின் வழித்தே என்னும் இலக்கண நினை யில் நின்று இதனை உணர்த்துகின்றனர் யுவவர். எலிமயிர்ப் போர்வையொடு மயிர்ப்படாம் விரித்து பெருங். 1.47:179 மயிரெலியின் போர்வையொடு எம்மன்னன் விடுத்தானே மேலும், எங்குமில்லன எலிமயிர்த்தொழில் பொங்கு பூம்புகைப் போர்வை-சீவக. 2680. பணிமயிர்க் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய -சீவக.1874. கனிமயிர்க் குவீர்ப்பன கண்கொளாதனவாம்-சீவக. 2471. என்ற புலவர் விளக்கங்களும் இதன் தனித்துவத்தை எடுத்து இயம்புவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/74&oldid=1498657" இலிருந்து மீள்விக்கப்பட்டது