பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 தமிழர் ஆடைகள் புவிநிறக் கவசம் (புறம். 13), பொள்னணி கவசம் (சீவக 799), ஆடகக் கவசம் (கம்ய. ஆரணி. 480) கற்றை அக்கடர்க் கவசம் (கம்ப. 1385), ஓளிகினர் கவசம் (கம்ப. 9274) போன்ற கவசம் பற்றிய எண்ணங்கள் இதன் உருவாக்க நிலையை உரைத்து நிற்கின்றன. போரைப் பொழுதுபோக்காகக் கொண்டு நிகழ்ந்தவர் தமிழர். விளையாட்டு தங்கள் உயிருக்கு வினையாகிவிடக் கூடாது என்ற எண்னமும் அவர்களிடம் இருந்தது. எனவேதான் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள, அதற்கு ஏற்றாற்போன்று உடை அணிந்து செல்கின்றனர். இவற்றுள் முதலிடம் பெறுவதே கவசம், மக்கள் சிந்தனையில் மிகுந்த இடம் பெறும் தன்மையால், காலந்தோறும் பெற்ற வளர்ச்சியினையும் இக்கவசம் பற்றிய வரலாறு தரும், 25. அரத்தம் சிவந்த நிறமானது எனத் தன் பெயரிலேயே சொல் விளக்கத் தினைக் கொண்ட ஆடையாகிய இது பதினெண்கீழ்க் கணக்கில் தோற்றம் பெறுகின்றது. 'அரத்தம் உடீஇ அணிபப்பபூசி (இணை. மாலை. நூற்+ மரு. 144) பரத்தை மனை நோக்கிச் சேடியை அனுப்பும் நிலையில் நீதிநூல் இதனைக் காட்டும். குறிப்புமொழியாகப் பயன்படும் இவ்வாடை, காரிகால மகளிர் உடுத்தியதாகச் சிலப்பதிகாரத்தில் கட்டப்படுகின்றது. ஆடவரின் ஆடையும் அரத்த ஆடையாக அமையும் (சிலப். 22:45), பெருங்கதையிலும் அரத்தம் பற்றிய. எண்ணம் உண்டு (1.42:208), அடியார்க்கு நல்லார் உரைக்கும் துகில் வருக்கத்துள்ளும் இது இடம் பெறுகின்றது (14:108). இவ்வாடை அரத்த நிறமுடைய இடை எனப் புகனா கின்றதே தவிரப் பட்டா பருத்தியா என்பது தெளிவுறவில்லை. அரத்தப்பட்டு என்னுமிடத்தில் பட்டு என்பது விளக்கம் பெறு இன்றது. அரத்தப் பட்டினையே அரத்தம் எனச் சுருக்கி அழைத் திருக்கவும் வாய்ப்புண்டு, இன்று அரத்தம் என்று கட்டும் தன்மை ஆடைக்கில்லை. இதனைப் போன்று அடியார்க்கு நல்லார் உரைக்கும் கரியல் (14:108) என்ற ஆடையும் கறுத்த நிறத்தால் பெயர் பெற்றிருக்கலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/77&oldid=1498662" இலிருந்து மீள்விக்கப்பட்டது