பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 4. பரீயட்டக்காசு தமிழர் -ஆடைகள் அடிவார்க்கு நல்லார் குறிப்பிடும் இத்துரில் பற்றிய எண்ணம் எதுவும் விளக்கமுறவில்லை. பொற்காசுகளை ஓரத்திலே வைத்துத்தைத்த துகிலாடை என்பர். பரிவட்டம் என்றதொரு ஆடையினைப் பற்றிய எண்ண்மும் உண்டு." இன்று, கடவுளுக்குச் சாத்தும் ஆடையை "பரிவட்டம் சாத்துதல்' என்று குறித்தல் உண்டு, பரிவட்டம் எல்லாத் தெய்வங் கட்கும் சாத்துதல் இல்லை. மாடன், இசக்கி போன்ற சிறு தெய்வங்களின் ஆடையினைப் பரிவட்டம் என்று சொல்ல மாட்டார்கள். உருவற்ற பீடத்திற்குப் போடும் துணியினைப் பரிவட்டம் என்பர் (கன்னியாகுமரி மாவட்டம்). அபிஷேகத் நிற்குக் கொடுக்கும் குடும்பத்தினரில் மூத்தோருக்குக் கோயிலில் பரிவட்டம் என்னும் துணியினைத் தலையில் கட்டுவர் (10 geng). பரியட்டக்காசு,பரிவட்டம் இரண்டும் தொடர்புடையவையா என்பதும் ஆய்விற்குரியது. ஆலின் சிறப்புடைய ஆடையைச் கட்டுவதில் இரண்டும் ஒன்றுபடக் காண்கின்றோம். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை. 5. தேவாங்கு அடிவார்க்கு நல்லார் கட்டும் துகில் வகையுள் ஒன்று. இன்று ஓர் இனத்தார் தேவாங்குச் செட்டியார் என வழங்கப்படு இன்றனர். தேவாங்கு என்ற ஆடையினை தெய்த காரணத்தால் இப்பெயர் பெற்றிருக்கலாம். வடநாட்டாகும் தேவாங்கு என்ற தொரு உடை பற்றிய எண்ணத்தைத் தருகின்றனர்.'9 முடிவுரை சங்கம் முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய, தமிழர் ஆடை குறித்த சொற்கள் இவண் ஆராயப்பட்டன. முழுதினையில் இவை தரும் எண்ணங்களாகச் சிவைற்றைக் கொள்ளலாம். 69. Tamil Lexicon Vol.IV, part-L. 70. There are other words a5out fabrics Samaraiccakuha Which are equally of great interest. They are devanga and devadusa which perhaps signify the same kind of stuff. Devanga is said to have been made of silk..." - Costumes Textiles Cosmetics & Coiffure - Dr. Moti - chandra, page.115.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/89&oldid=1498714" இலிருந்து மீள்விக்கப்பட்டது