பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

என்னும் அடி விளக்குகிறது.

சிறுமியர் அணியும் ஆடை, சிற்றாடை எனப்படும். மழையில் நனைந்து வந்த ஒளவையாருக்குப் பாரிமகளிர் நீலச் சிற்றாடை கொடுத்து உதவினர். காலத்தினாற் செய்த அவ்வுதவிக்கு மாறாக,

'பாரி பறித்த கலனும் பழையனுரர்க
காரி பன்றிந்த களைக்கோலும் சேரமான்
வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்"

என்னும் அழியாத பாட்டைப் பாடிப் போந்தார் ஒளவை மூதாட்டி, மெல்லிய நீலநிற ஆடைக்குமேல், முத்துக்களினாலாகிய 'விரிசிகை' யென்னும் இடையணியை மாதவி அணிந்திருந்தாள். எழுகோவை, எண்கோவை, ஒன்பது கோவை, பதினாறு கோவை மணியென, இடையணி பலதிறப்படும். நீலநிறமானது, வெண்மணிகளின் ஒளியை எடுத்துக்காட்டுகிறது. பழங்காலத்தில், முத்துக்கோப்பவர், நீலத்துகிலில் அவற்றை வைத்துக்கொண்டு கோத்தனர். மண மண்டபத்தின் விதானம் நீலப்பட்டினாலும், பந்தல் முத்தினாலும் அமைக்கப்பட்டன என்று மங்கல வாழ்த்துக் காதை கூறுகின்றது. நீலவானில் விண்மீன்கள் விளங்குவதும், முத்து, வயிரம் போன்ற மணிகளினால் செய்யப்பட்ட அணிகள் நீலப்பட்டினலாகிய பேழைகளில் வைக்கப்படுவதும் நாம் காண்பனவாகும். துறவறத்தை மேற்கொண்டோர் காவியாடையுடுத்தல் மரபு. இதனை, 'முல்லைப்பாட்டு' போன்ற நூல்களிற் காணலாம்.

இன்னும், முழந்தாள் வரையில் அணிந்துகொள்ளும் 'வட்டுடை' என்னும் உடையும் அக்காலத்தில் இருந்தது. காமன்