பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


கட்டடக்கலை

மனிதனது உள்ளத்தில் நிரம்பிப் பெருக்கெடுத்து வெளிப்படும் ஆற்றலே கலை என்பது. இவ்வாற்றல் கட்டடமாக வெளிப்படும்; காவியமாக வெளிப்படும்; ஒவியமாக வெளிப்படும்; சிற்பமாக வெளிப்படும்; இசையாகவும் வெளிப்படும் உள்ளத்து உணர்ச்சியைத் தோற்றுவிக்கும் நடனமாகவும் வெளிப்படும். காவிரிப்பூம்பட்டினத்து அரண்மனைத் தோட்டத்தில் ஒர் அற்புத மண்டபம் இருந்தது. மகதநாட்டு மணி வேலைக்காரரும் அவந்தி நாட்டுக் கொல்லரும், மகாராட்டிரத்தைச் சேர்ந்த பொன் வேலைக்காரரும், யவன நாட்டுத் தச்சரும், தமிழ் நாட்டுத் தொழில் அறிஞரும் ஒன்று சேர்த்து அம்மண்டபத்தை அமைத்தனர். அதன் தூண்கள் பவளத்தால் இயன்றவை; போதிகைக் கட்டைகள் பலவகை மணிகளால் சமைந்தவை, மண்டபத்தின் ஒவ்வொரு கோணத்திலும் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. மேற்கூரையும் கீழிடமும் பொன்னால் இயன்றவை. எனவே, தரைப்பகுதி சந்தனத்தால் மெழுகப்பட்டிருந்தது."

மக்கள் வாழ்ந்த உயர்ந்த மாடங்களில் நிலா முற்றங்கள் அமைந்திருந்தன. தெருக்களின் அடியில் கண்ணுக்குத் தெரியாதபடி பெரிய கழிநீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய நகரங்களில் பூங்காக்களும் இயந்திர வாவிகளும் அமைந்திருந்தன.

ஓவியக்கலை

ஒவியம் வல்லாரைக் 'கண்ணுள் வினைஞர்' என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது. 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துவோர்' என்பது இதன் பொருள்.